கோப்புப் படம் 
தமிழகம்

7-ல் பள்ளிகள் திறப்பு: தூய்மை பணிகளை மேற்கொள்ள உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. அதற்கேற்ப,அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள், முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள், கழிவறைகளை சுத்தம் செய்வது, மின் இணைப்புகள் சரிபார்ப்பு, பள்ளி வளாக தூய்மை பணிகளை செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT