மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டம் குறித்து சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் ஐ.கருணாநிதி (பல்லா வரம்), ரூபி ஆர்.மனோகரன் (நாங்குனேரி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பி.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று வந்தனர்.
அப்போது கோயிலில் நாள் முழுவதும் செயல்படுத்தப்படும் அன்னதானத் திட்டத்தை ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா, உணவின் தரம், குறைகள் ஏதும் உள்ளதா என பக்தர்களிடம் நேரில் கேட்டறிந்தனர்.
பின்னர், சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர். ஆய்வின்போது, ஆட்சியர் சங்கீதா, அறநிலையத் துறை இணை ஆணையர் க.செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் ஆகி யோர் உடன் இருந்தனர்.