சென்னை ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் அருகே ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சென்னை சங்கர்நகர் பகுதியில் விறகு கடை நடத்தி வந்த கணேசனை க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2011 ஆக.9-ல் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், எனக் கோரி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் உரியநடைமுறைகளை பின்பற்றிதான் மனுதாரர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத காவலுக்கு உரிய ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனையும் விதித்துள்ளது.
சிறையில் இருந்தபோது அவர் இந்த குற்றச்சாட்டைக் கூறவில்லை. பூந்தமல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து அவரால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்தமனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது, என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, மனுதாரர் நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு வழக்கில் இந்தகோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம் எனக்கூறி வழக்கைதள்ளுபடி செய்தனர்.