தமிழகம்

பெண் கொடுக்க மறுத்தவர்கள் வீட்டுக்கு தீவைப்பு, குண்டு வீச்சு: விருத்தாசலத்தில் பரபரப்பு

செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் தான் விரும்பிய பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த நபர், விரும்பிய பெண்ணின் மூத்த சகோதரி வீட்டின் மீதும் பெண்ணின் தந்தை வீட்டின் மீதும் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடிவிட்டார்.

விருத்தாசலத்தை அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 4 மகள்கள். இதில் 2-வது மகளான சங்கீதாவை பழனியம்மாளின் உறவினரான அரியலூர் மாவட்டம் பரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் திருமணம் செய்துகொள்வதற்காக பெண் கேட்டுள்ளார்.

இதை சங்கீதா விரும்பவில்லை. இதுகுறித்து அவர் நெய்வேலி கைகலார்குப்பம் கிராமத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரி ராஜலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜலட்சுமி தனது கணவரின் சகோதரரான சந்திரசேகர் என்பவருக்கு சங்கீதாவை கடந்த 6 மாதங்களுக்கு முன்திருமணம் செய்துகொடுத்துள்ளார். இதற்கு தொட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள சங்கீதாவின் பெரியப்பா ராமலிங்கமும் உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நண்பர் ஒருவருடன் பைக்கில் கைகலார்குப்பம் வந்த செல்வக்குமார் ராஜலட்சுமி வீட்டின் முன் மற்றும் பின்புற கதவுகளைப் பூட்டி, வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி யுள்ளார். கையுடன் கொண்டுவந்த காஸ் சிலிண்டரை திறந்து டியூப் மூலம் வீட்டினுள் செலுத்தி தீவைத் துள்ளார்.

ராஜலட்சுமி மற்றும் அவரது குழந் தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வீட்டின் கதவை உடைத்து ராஜலட்சுமி அவ ரது குழந்தைகளை மீட்டு, விருத் தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கைகலார்குப்பத்திலிருந்து தப்பிய செல்வக்குமார் அங்கி ருந்து புறப்பட்டு சங்கீதாவின் பெரி யப்பா ராமலிங்கம் வசிக்கும் தொட்டிக்குப்பம் கிராமத்துக்குச் சென்றார். அவர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். முதலில் வீசிய குண்டு வெடிக் காததையடுத்து மற்றொரு குண்டை வீசியுள்ளார். இந்த குண்டு வெடித்ததில் ராமலிங்கம் அவரது மனைவி யசோதை ஆகியோர் காயமடைந்தனர்.

நாட்டு வெடுகுண்டு வீசியச் சம்பவங்கள் குறித்து விருத் தாசலம் போலீஸார் மற்றும் மங்கலம்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு வெடிக்காத நிலையில் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். கடலூர் எஸ்பி ராதிகா சம்பவ இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை போலீ ஸார் செல்வகுமார் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT