மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக, ஃபேஸ்புக்கில் அவதூறு செய்தி பரப்பிய மத்திய அரசு ஊழியர் ஒருவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் நேற்று, காமராஜர் குறித்த பகிர்வு ஒன்றிற்கு, ஜெயேந்திர தாஸ் என்பவர் காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து உள்ளூர் தலைவர்கள் சிலர், காவல்துறையில் அளித்ததன் அடிப்படையில், கருத்துக்களை பகிர்ந்த ஜெயேந்திர தாஸ் என்பவரை தாம்பரம் போலீசார் இன்று கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திர தாஸ், முன்னதாக தொழிற்சங்க தலைவர் ஒருவரையும் இழிவுப்படுத்தும் விதமாக கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.