தமிழகம்

சிதம்பரத்தில் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனைக்கான ஆதாரங்கள் உள்ளன: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: சிதம்பரத்தில் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புதுக்கோட்டையில் தேசியகுழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் சிறார்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமர்வு ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அதில், ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஆனால், இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்ததுடன், என் மீது அவதூறாக பேசியுள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இருவிரல் பரிசோதனையை தமிழக அரசு செய்தது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT