அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும்: அன்புமணி ராமதாஸ் 

செய்திப்பிரிவு

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," தில்லியில் வரும் 28ம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT