தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சியை நோக்கி பல்லாவரத்தில் தொடங்கிய சிஐடியு நடைபயணம். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

பல்லாவரம் | சிஐடியு தொழிற்சங்கம் நடைபயணம்

செய்திப்பிரிவு

பல்லாவரம்: அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலியாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுசங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டு உள்ளனர். திருச்சி நோக்கி பயணிக்கும் இக்குழு நேற்று பல்லாவரத்தில் தொடங்கியது.

நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்தமுறை கூடாது என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ம் தேதி 7மையங்களில் இருந்து சிஐடியுசார்பில் நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயணம் மே 30-ம் தேதி திருச்சியில் நிறைவு பெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.தனலட்சுமி தலைமையிலான சென்னைமண்டலக்குழு பல்லாவரத்தில் நேற்று பயணத்தை தொடங்கியது. இரவு கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி மீண்டும் நடை பயணத்தை தொடங்குகின்றனர். இந்த குழுவில் மாநிலச் செயலாளர்கள் பா.பாலகிருஷ்ணன், சி.திருவேட்டை, உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT