தமிழகம்

சென்னை | போக்குவரத்து காவலருக்கு குடிநீர், குளிர்பானங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கோடை வெயிலின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாருக்கு குடிநீர், குளிர்பானங்கள் வழங்கும் முகாம் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,தொடங்கி வைத்தார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மே 24-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை போலீஸாருக்கு குடிநீர், குளிர்பானங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதில் காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணைஆணையர் என்.எம்.மயில்வாகனன் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT