‘கொடுப்போம் மகிழ்வோம்’ வாரத்தை கொண்டாடும் விதமாக இல்லங்களில் உள்ள முதியோர், குழந்தைகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘தான் உத்சவ்- கொடுப்போம் மகிழ்வோம்’ வாரம் அக்டோபர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் இந்த விழாவின் போது பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், பொது மக்கள் தங்க ளால் இயன்ற வகையில் பிறருக்கு உதவும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ‘மக்கள் ஆட்டோ’வை சேர்ந்த வர்கள் இல்லங்களில் இருக்கும் முதியோர்கள், குழந்தைகளை வழிபாட்டு தலங்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளுக்கு இலவசமாக தங்கள் ஆட்டோவில் அழைத்து செல்லவுள் ளனர். மேலும், தமிழ் மொழி தெரியாத வர்கள் தங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு பேச்சு தமிழைக் கற்றுக் கொடுக்க வுள்ளனர் என்று ‘மக்கள் ஆட்டோ’ வின் தலைவர் மன்சூர் அலிகான் செவ்வாய்கிழமை நிருபர்களிடம் கூறினார்.
‘குழந்தைகள் நாடாளுமன்றங்கள்’ என்ற அமைப்பு ஆதரவற்ற ஒரு குடும்பத்துக்கு வீடு கட்டி தர திட்டமிட்டுள்ளது. அது தவிர இந்த வாரத்தில் பார்வையற்றோரின் நிலையை உணரும் பொருட்டு, பார்வையுள்ளவர்களை தங்கள் கண்களை கட்டிக் கொண்டு உண வருந்தும் நிகழ்ச்சி, 50 பொது இடங்களில் ஆங்கிலம் தெரிந்தவர் கள், தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘கொடுப்போம் மகிழ்வோம்’ வாரத் தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி மதுசூதனன் செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களிடம் இதைத் தெரிவித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது சங்கரா கண் மருத்துவமனையைச் சேர்ந்த வி. ஷங்கர், சிட்டி கனெக்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் சல்லா, ஆஸ்பையர் அகாடெமியைச் சேர்ந்த சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.