ஜி-20 மாநாட்டுக்காக உத்தராகண்ட் வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தமிழகம்

ஜி-20 மாநாட்டுக்காக உத்தராகண்ட் வரத்தொடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்

செய்திப்பிரிவு

சென்னை: ஜி-20 நாடுகளின் 2-வதுமாநாட்டுக்காக உத்தராகண்ட் தயாராகி உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள நரேந்திர நகரில் ஜி-20 மாநாடு நாளை (மே 25) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளைச் சேர்ந்தபிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ஜாலிகிராண்ட் விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாரம்பரிய முறைப்படி திலகமிட்டு சிறப்பாக வரவேற்கப் பட்டனர்.

மாநாட்டின்போது `சர்வதேச ஊழல் எதிர்ப்பு அமைப்பு' குறித்து விவாதம் நடைபெறும். பின்னர் மாநிலத்தின் மலை வளம்,கலாச்சாரம், கங்கையின் தெய்வீகம் மற்றும் மகத்துவம் குறித்து வெளி நாட்டினர் சென்று தெரிந்துகொள் வார்கள்.

இதுகுறித்து முதல்வர் தாமி கூறும்போது, ``ராம் நகரில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜி-20யின் தலைமை அறிவியல் ஆலோசகர் வட்ட மேஜைக்கு பிறகு, நரேந்திர நகரில் நடைபெற உள்ள ஜி-20யின் 2-வது ஊழல் எதிர்ப்பு பணிக்குழுக் கூட்டம் தேவபூமியான உத்தராகண்டின் மற்றும் ஒரு சாதனை.

புவியியல் ரீதியாக சிறிய மாநிலமான உத்தராகண்டுக்கு இதுபெருமையானது. இம்மாநில அரசு, நிர்வாகம் மற்றும் மக்கள் மீது பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. இதற்காகப் பிரதமருக்கு நன்றி'' என்றார்.

SCROLL FOR NEXT