மதுராந்தகம்: செய்யூர் அருகே கடந்த 14-ம்தேதி கள்ளச்சாராயம் அருந்திய 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் மேல்மருவத்தூர் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டனர். மாவட்ட எஸ்பிபிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், செய்யூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரனும் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் செய்யூர் வழியாககொண்டு சென்று விற்கப்பட்டதாகவும் இதன்பேரிலேயே இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.