சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்குவாஷ் போட்டிக்கான டி-சர்ட்டுகளை நேற்றி அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடன், விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர். 
தமிழகம்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை நடத்த சென்னை தயாராகி வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை நடத்த சென்னை தயாராகி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி வரும் ஜூன் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழக அரசின் நிதியுதவியுடன் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியை நடத்தும் இந்தியாவுடன், ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

2023-ம் ஆண்டுக்கான சர்வதேசஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியை நடத்த சென்னை தயாராகி வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற வகையில் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டன. வரும் நாட்களில் சர்வதேச அளவிலான ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.50 கோடிக்கான காசசோலையை, தமிழ்நாடுஸ்குவாஷ் ராக்கெட் அசோசியேசன் தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில், விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா,விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் மேகநாத ரெட்டி, நிர்வாக மேலாளர் வே.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT