ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, படகு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில், திட்ட இயக்குநர் செல்வராசு உள்ளிட்டோர். 
தமிழகம்

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி | ஏலகிரி மலையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

ஏலகிரி: ஏலகிரி மலையில் கோடை விழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் இல்லை, விளை யாட்டு உபகரணங்கள் சேதமடைந் துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. பொன்னேரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி கரோனா பெருந்தொற்றால் கோடை விழா கடந்த சில ஆண்டு களாக நடைபெறவில்லை. மேலும், கோடை விழா அரங்கத்துக்கான பணிகளும் நடைபெற்று வருவதால் கோடை விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை ஏலகிரி மலையில் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தாலும் மலையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் குறைவாக இருப்பதாலும், மலையில் உள்ள சிறுவர் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் போதிய வசதிகள் இல்லை என்றும், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்திருப்பதாகவும், அங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் கடந்த 16-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, படகு இல்லம், கோடை விழா அரங்கம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சுற்றுலா பயணி களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். கோடை விழாவுக்காகவும், தற் போது கோடை விடுமுறை என்ப தால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் ஏலகிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் சேதமடைந்துள்ள விளையாட்டு சாதனங்களை புதுப்பிக்க வேண் டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அப்போது, திட்ட இயக்குநர் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT