தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் பணி: மாதவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் மில்க் காலனி சாலையில், 200 அடி சாலை முதல் குமரப்பபுரம் முதன்மை சாலை வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதன்படி, லாரிகள் மற்றும் கனரக வணிக வாகனங்கள் 200அடி சாலையில் இருந்து மில்க் காலனி சாலையில் செல்ல அனுமதி இல்லை. 200 அடி சாலை சந்திப்பில் இருந்து அசிசி நகர் பிரதான சாலை சந்திப்பு வரை ஒருவழியாக மாற்றப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம், கார், ஆட்டோ ரிக்ஷா மற்றும் லகுரகவர்த்தக வாகனங்கள் ஆகியவைமட்டுமே 200 அடி சாலையில் இருந்து மில்க் காலனி சாலையில் செல்ல அனுமதி உண்டு.

அசிசி நகர் பிரதான சாலைசந்திப்பில் இருந்து 200 அடி சாலை நோக்கி செல்ல அனைத்து வகை வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. வாகனங்கள் அசிசி நகர் பிரதான சாலை வழியாக செல்வதன் மூலம் காமராஜ் சாலை மற்றும் 200 அடி சாலை சென்றடையலாம்.

SCROLL FOR NEXT