சென்னை: ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (மே 21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் தவிர்க்கமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை ( 21ம் தேதி ) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.