தமிழகம்

கருப்பை நீக்க அறுவை சிகிச்சை விவரம் தர மத்திய அரசு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சில மருத்துவமனைகளில் தேவையின்றி கருப்பை நீக்கஅறுவை சிகிச்சை மேற்கொள்ளும் விவகாரத்தை மத்திய சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.

ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருப்பை நீக்க சிகிச்சைகளின் நிலவர விவரங்களை அளிக்க வேண்டும்.

பேறுகால மரணங்கள் குறித்துஆய்வு செய்யும் நடைமுறைஅரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏற்கெனவே அமலில் இருப்பதைப் போன்று கருப்பை நீக்க அறுவை சிகிச்சை குறித்தும் தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT