கோவை ஈச்சனாரி செல்வம் மஹால் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசும் மாநில தலைவர் அண்ணாமலை .படம் ஜெ .மனோகரன் 
தமிழகம்

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பாஜக குழு நாளை சந்திப்பு - மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஈச்சனாரியில் செய்தியாளரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கூறியதாவது: திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் மற்றும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கட்டுப்பாடின்றி செயல்படுவது உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாஜக குழுவினர் ஆளுநரை நாளை சந்திக்க உள்ளனர். அப்போது, டாஸ்மாக் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆளுநரிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT