தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயங்குநர் எஸ். பாலசந்திரன் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, "வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு நோக்கி நகரும். இதன் காரணமாக குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கத்தில் 3.செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும்" என்றார்.

SCROLL FOR NEXT