தமிழகம்

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தொகுதியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெங்கு ஆய்வு

செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெங்கு குறித்து இன்று (அக்.5) ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, "டெங்குவை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

புதுச்சேரியில் காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பைகளை சம்பந்தபட்டவர்கள் 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றாவிட்டால் ரூபாய் 100லிருந்து ரூபாய்  1000வரை அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாடும் சுத்தமாக இருக்க வேண்டும், புதுச்சேரியும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்திலிருந்து டெங்கு பாதித்தவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி வருகின்றனர்" என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT