ஈரோடு: அத்திக்கடவு- அவிநாசி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டமானது, கோயம் புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும். தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.