தமிழகம்

உரிய எடை அளவை வணிகர் பயன்படுத்த வேண்டும்: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம்நடைபெற்ற ஆய்வில் 775 கடைகளில் எடையளவு உள்ளிட்டவை தொடர்பான விதிமீறல்கள் இருந்ததாகவும், விதிப்படி உரிய எடையளவுகளை பயன்படுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உ.லட்சுமிகாந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டமுறை எடையளவுகள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள்உள்ளிட்ட 2891 கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 775 கடைகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விதிமீறல்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம்வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு விற்பனை: எடை குறைவாக விநியோகித்தல், முத்திரை, மறுமுத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்துதல், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்கள் ஆய்வுகளின்போது காணப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் எனவணிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT