சாத்தனியில் சூறாவளியால் சேதமடைந்த வீடு. 
தமிழகம்

சிவகங்கை அருகே 6 கிராமங்களில் திடீர் சூறாவளி - 4 வீடுகள் சேதம், 50 மரங்கள் சாய்ந்தன

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே 4 கிராமங்களில் திடீரென பலத்த சூறாவளி வீசியதால் 4 வீடுகள், 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

சிவகங்கை அருகே விட்டனேரி ஊராட்சி விட்டனேரி, குருக்கத்தி, சாத்தனி, உடவயல், அல்லூர் ஊராட்சி சூறவத்தி, ராணியூர், இலுப்பக்கோட்டை ஆகிய 6 கிராமங்களில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை திடீரென பலத்த சூறாவளி வீசியது.

இதில் சாத்தனி, உடவயல், விட்டனேரி, குருக்கத்தி ஆகிய கிராமங்களில் 4 வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. சில மரங்கள் மின்கம்பிகளில் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் மரங்களை அகற் றினர். மழையின்றி சூறாவளி மட் டும் வீசியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாத்தனியைச் சேர்ந்த மனோகரன் கூறுகையில், 50 ஆண்டு களில் இதுவரை இல்லாத அளவுக்கு சூறாவளி வீசியது. சேத மடைந்த வீடுகளுக்கும், சாய்ந்த மரங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT