தமிழகம்

மாநில தேர்தல் ஆணையராக பழனிகுமார் மீண்டும் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஆர்.பழனிகுமாரை மீண்டும் அதே பதவியில் நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல்களை நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநிலதேர்தல் ஆணையத்தின் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வெ.பழனிகுமார், கடந்த 2021-ம் ஆண்டுமே 29-ம் தேதி நியமிக்கப்பட்டார். அப்போது அவர் 2 ஆண்டு களுக்கு இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பழனிகுமாரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பழனிகுமாரின் பதவிக்காலத்தை 2024-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி வரை நீட்டித்து அதாவது பழனிகுமாரை மறு பணி நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமைச் செயலர் வெ.இறையன்பு தமிழக அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT