சென்னை: தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம் தமிழர்களின் குறிப்பாக தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்" என தினகரன் கூறியுள்ளார்.