சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல ஆரோக்கியத்தோடும், இன்னும் பல ஆண்டுகள் நம் நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்திட வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.