மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | கோப்புப் படம் 
தமிழகம்

இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் பிரிந்த பிறகு, பழனிசாமி தரப்பினரின் ஏற்பாட்டில் கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு மற்றும் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடந்த ஏப்.20-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி சட்ட விதிகளின் திருத்தங்கள் ஏற்கப்பட்டதாக அதிமுக தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர் சேர்க்கை, கர்நாடக தேர்தல், டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT