தமிழகம்

நிரந்தர அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்: அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நிரந்தர அங்கீகாரம் பெற்ற தட்டச்சுபயிலகங்கள் இனி 2 ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு புதிய விதிமுறைகளை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வணிகவியல் தொழில்நுட்ப பயிலங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, அங்கீகார நடைமுறைபோன்றவை தொடர்பான தொழில்நுட்பக்கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு ஆய்வு செய்து தொழில்நுட்ப பயிலகங்களுக்கு பின்வரும் புதிய விதிமுறைகள் நிர்ணயித்து ஆணையிடுகிறது.

# ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இயங்கிவரும் தொழில்நுட்ப பயிலகத்திலிருந்து கால் கிலோ மீட்டர் இடைவெளிக்குள் தொடங்கப்படும் பயிலகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படாது.

மக்கள் தொகைக்கு ஏற்ப...

# ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இயங்கிவரும் பயிலகத்திலிருந்து கால் கிலோ மீட்டருக்கு மேல் அரை கிலோ மீட்டர்இடைவெளிக்குள் புதிய பயிலகங்கள் தொடங்கப்படுவதாக இருந்தால் அப்பகுதியின் மக்கள்தொகை நெருக்கம் மற்றும் வணிகவியல் கல்வியின் தேவை அடிப்படையில் பரிசீலனை செய்து, தேவை என கருதினால் மட்டும் ஒப்புதல் அளிக்கப்படும்.

# தொழில்நுட்ப பயிலகம் அனுமதி பெறாமல் கிளைப்பயிலகம் தொடங்கக் கூடாது. அனுமதி பெற்ற பயிலகம் அனுமதி பெறப்படாத பயிலகத்தின் மாணவர் களை அரசு தேர்வுக்கு அனுப் பக் கூடாது. மீறினால் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஸ்டென்சில் கட்டிங்

# முதுநிலை தேர்வுக்கு செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் நகல் பெருக்கி தாளில் தட்டச்சு செய்வது (ஸ்டென்சில் கட்டிங்) எப்படி என்று கற்றுத்தர வேண் டும். இதை ஆய்வு மூலம் அறிய வசதியாக தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலகத்தில் தட்டச்சு செய்த நகல் பெருக்கிதாள்களை தேர்வு ஆய்வாளரி டம் காண்பிக்க வேண்டும்.

# நிரந்தர அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் அங்கீகாரத்தை 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். புதிய தட்டச்சு பயிலகங்கள் தொடங்க 2 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்.

# அங்கீகாரம் தொடர ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரே தவ ணையில் செலுத்த வேண்டும்.

# தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT