தமிழகம்

மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப்-ல் எடுக்கும் வசதி இன்று அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: ரயிலில் பயணிக்க செல்போனின் வாட்ஸ்ஆப் வாயிலாக எளிமையாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்காக, அறிமுகம் செய்ய உள்ள பொது எண்ணை பயணிகள் பதிவு செய்துகொண்டு, அதன் வாயிலாக டிக்கெட் எடுக்கலாம். வாட்ஸ்ஆப்பே, ஜீபே, நெட்பேங்கிங் ஆகியவை வாயிலாக கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். வீட்டில் இருந்து புறப்படும்போது டிக்கெட் எடுக்கலாம். பயணம் முடியும்போது, கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து வெளியே செல்லலாம்.

SCROLL FOR NEXT