தமிழகம்

கொடைக்கானல் சுற்றுப் பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்பினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப் பயணமாக மே 14-ம் தேதி மாலை கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கோகினூர் மாளிகையில் மனைவி லட்சுமியுடன் தங்கிய அவர், மே 15-ம் தேதி அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் கொடைக்கானல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக இன்று மதுரை புறப்பட்டார்.

அவரை, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திலகவதி, எஸ்பி பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் ராஜா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். நண்பகல் 12.20 மணிக்கு மதுரை செல்லும் வழியில் அம்மையநாயக்கனூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வரவேற்றார்.

சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மதுரை விமான நிலையம் சென்றார். பிற்பகல் 2 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்பினார். இதையடுத்து, 3 நாட்களாக போலீஸார் கட்டுப்பாட்டில் இருந்த கொடைக்கானல் மெல்ல இயல்பு நிலைமைக்கு திரும்பியது.

SCROLL FOR NEXT