புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அன்னவாசல் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயம் இல்லாத நாட்களில்தான் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் பணிவழங்கப்படுகிறது. கேரளாவைப் போன்று விவசாயப் பணிகளுக்குஇத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது சாத்தியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.