புதுச்சேரி: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி27 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ்,சங்கர், தரணிவேல், ராஜ மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 21 பேருக்கு முண்டி யம்பாக்கம், காலாப்பட்டு பிம்ஸ்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன் முடி, செஞ்சி மஸ்தான், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ்பி நாதா மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயிரிழந்தவர்களின் குடும் பத்துக்கு முதல்வர் தனது வருத் தத்தை தெரிவித்திருக்கிறார். அதோடு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் நடவடிக் கையை தீவிரப்படுத்தினாலும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டு சென்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.
இச்சம்பவத்தில் காவல் துறையினர் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமரன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். வரும் காலங்களில் கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றார்.