கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள். 
தமிழகம்

ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கொடைக்கானலில் குறைந்தது சுற்றுலா பயணிகள் வருகை

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு நேற்று வருகை தந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்துக்கு தடையால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்தது.

கொடைக்கானலுக்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் வருகை தருவதாக அறிவிப்பு வெளியானது. இதன்காரணமாக கொடைக்கானல் மலைக்கு வத்தலகுண்டு மலைச்சாலை வழியாகச் செல்ல நேற்று 3 மணி நேரம் தடை என்ற அறிவிப்பும் வெளியானது. மேலும் கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் எனக் கருதி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நேற்று வரவில்லை. வழக்கமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காணப்படும் கூட்டம் இந்த வாரம் இல்லை. கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் குறைந்த சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர்.

SCROLL FOR NEXT