விஜயகுமார் 
தமிழகம்

தமிழக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டவர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் மட்டப்பாறையைச் சேர்ந்த ராஜா மகன் விஜயகுமார் (47) மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் தென்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், அவரை கைது செய்து மதுரைக்கு நேற்று அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT