காரைக்காலை அடுத்த வாஞ்சூர் கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கிய நீல திமிங்கலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள். 
தமிழகம்

வாஞ்சூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 80 அடி நீள திமிங்கலம்

செய்திப்பிரிவு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் உள்ளது.

இதன் அருகில் உள்ள வாஞ்சூர் கடற்கரையில் நேற்று சுமார் 80 அடி நீளம் உள்ள நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு துறைமுக ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீன் வளத் துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.

பின்னர், காரைக்காலை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உதவியுடன் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின், அந்த திமிங்கலத்தை பத்திரமாக மீட்டு, கயிற்றில் கட்டி இழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டனர்.

SCROLL FOR NEXT