கோவை: புகைப்படம் எடுப்பதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அது குறித்த தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமலேயே பலரும் இருக்கின்றனர்.
அப்படியானவர்களுக்கு பயனளிக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘புகைப்படப் பயிற்சி’ வகுப்பு நான்கு நாட்கள் கோவையில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வரும் வியாழன் (மே.18) தொடங்கி, ஞாயிறு (மே. 21) வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பானது 6 முதல் 17வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னொரு பிரிவாகவும் நடைபெறவுள்ளது.
குழந்தைகள் பிரிவுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பெரியவர்களுக்கான பிரிவு மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். இந்த புகைப்படப் பயிற்சியை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற சர்வதேச புகைப்படக் கலைஞரும், சோனி, நிக்கான், கெனான் நிறுவனங்களின் முன்னாள் பிராண்ட் அம்பாஸிடருமான டி.ஏ.நடராஜன் அளிக்கவுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளுக்கான பிரிவிற்கு ரூ.1000/-, பெரியவர்களுக்கான பிரிவுக்கு ரூ.1250/-ம் (ஜிஎஸ்டி தனி) பயிற்சிக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/Photography2023 என்ற லிங்கில் பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். இங்குள்ள ‘க்யூஆர் கோட்’ மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7418036466 செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.