தமிழகம்

குறைந்த பராமரிப்பில் வளரும் மருத்துவ குணம் நிறைந்த பன்னீர் நாவல் பழம்

செய்திப்பிரிவு

மதுரை: மருத்துவக் குணம் நிறைந்த பன்னீர் நாவல் பழ சாகுபடி செய்தால் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம். சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கும் பழமாக இருப்பதால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது.

‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரமாகும். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவக் குணமுடையதால் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.

தேவை அதிகரிப்பு: இப்பழம் லேசான இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடன் இருப்பதால் நீரிழிவு நோயா ளிகள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் சமீபகாலமாக இப்பழத்துக்கான தேவை அதி கரித்துள்ளது.

இது குறித்து மதுரை திருப்பாலை அருகே காஞ்சரம்பேட்டையை அடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆர்.முருகேசன் கூறியதாவது: பெங்களூருவிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு இப்பழ மரக்கன்றுகளை வாங்கி வந்து எனது தோட்டத்தில் நட்டேன். இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு சரியாக வளருமா என்பது தெரியாததால், சோதனை முயற்சியாக 10 மரக்கன்றுகளை மட்டுமே நட்டு வளர்த்து வருகிறேன். தண்ணீர் மட்டும் பாய்ச்சி வருகிறேன்.

இதற்காக தனியாக வேறு எந்த பராமரிப்புப் பணி யையும் செய்யவில்லை. இரண்டரை ஆண்டுக்குப் பின்பு விளைச்சல் கிடைத்தது. ஆண்டுக்கு இருமுறை பலன் கொடுக்கிறது.

100 கிலோ பழங்கள்: எந்த செலவுமின்றி நல்ல லாபம் கிடைக்கிறது. ஒரு மரத்திலிருந்து குறைந்தபட்சம் 100 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 லிருந்து ரூ.200 வரை விற்பனையாகிறது என்று கூறினார்.

இது குறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் சு.செந்தூர்குமரன் கூறியதாவது: வாட்டர் ஆப்பிள் அல்லது பெல் ஆப்பிள் என பரவலாக அழைக்கப்படும் இப்பழத்தின் பெயர் பன்னீர் நாவல். ஜம்பு நாவல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் தோற்றம் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, இந்தோனேசியாவாகும். அங்கிருந்து பிலிப் பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளுக்கு பர வியது. இப்பழச்சாற்றை ஜாம், ஐஸ் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர். இப்பழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

100 கிராம் பழத்தில் உள்ள சத்துகள் விவரம் (மில்லி கிராம்களில்): புரதம்-0.6, மாவுச்சத்து-5.7, நார்ச்சத்து- 1.5, வைட்டமின் சி-156, வைட்டமின் ஏ-22, வைட்ட மின் பி1 (தயமின்)-10, வைட்டமின் பி3 (நியாசின்)-5, கால்சியம்-29, பாஸ்பரஸ்- 8, மெக்னீசியம்-5, கந்தகச்சத்து-13, இரும்புச்சத்து- 0.1. இதில் கொழுப்பு, குளுக்கோஸ் இல்லா ததால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினார்.

SCROLL FOR NEXT