தமிழகம்

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: நிதித்துறை செயலராக உதயச்சந்திரன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், நிதித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்தர ரெட்டி போக்குவரத்து துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கே.கோபால் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மறுவாழ்வு துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஜெகநாதன் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி மைதிலி கே.ராஜேந்திரன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT