புதுச்சேரி போலீஸாரை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும் பணியினை டிஜிபி சுனில்குமார் கௌதம் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் டெங்குவை கட்டுப்படுதுவற்கும், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து போலீஸாருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறை தலைமை அலுவலகத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் குறித்தும், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துகொள்வது குறித்தும் போலீஸாருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் போலீஸாரை டெங்கு காய்ச்சாலில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியினை டிஜிபி சுனில்குமார் கெளவுதம் தொடக்கி வைத்தார். மேலும் வரும் நாட்களில் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸாருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட உள்ளது.