திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கிய டிஜிபி சைலேந்திரபாபு. 
தமிழகம்

தி.மலை | ஏடிஎம் கொள்ளை வழக்கில் திறமையாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.1 லட்சம் வெகுமதி

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் வெகுமதியை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று வழங்கினார்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு ஹரியாணா மாநில கொள்ளையர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ள காவல் துறை யினருக்கு சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்.பி., கார்த்திகேயன், ராணிப்பேட்டை கூடுதல் எஸ்.பி., விஸ்வேஸ்வரய்யா, காவல் ஆய்வாளர்கள் சாலமன் ராஜா, புகழ், சுப்ரமணி, உதவி ஆய்வாளர்கள் சாபுதீன், நசுருதீன், தலைமை காவலர்கள் பழனிவேல், ஏழுமலை, சரவணன், முதல்நிலை காவலர் முபாரக், 2-ம் நிலை காவலர்கள் கலையரசன், குணசேகரன், நாகராஜ், பிரசாந்த் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் வெகுமதியை டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்.

SCROLL FOR NEXT