அரசு மைய அச்சகத்துக்கு ரூ.21 கோடியே 59 லட்சத்தில் புதிய நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் சமர்ப்பித்த அறிக்கை விவரம் வருமாறு:
அரசுக்குத் தேவையான அனைத்து அச்சகத் தேவைகளை யும் பூர்த்தி செய்யும் பணியை அரசு மைய அச்சகம் மேற் கொண்டு வருகிறது.
182 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரசு மைய அச்சகத் தின் பணிப் பளு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், பெரும்பாலான பணிகளை குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டும், அச்சகத் தின் இயந்திரப் பிரிவை நவீனமயமாக்கும் வகையில் ரூ. 6 கோடியே 50 லட்சத்தில் தனித்தாள் பல வண்ண அச்சு இயந்திரம், ரூ. 1 கோடியே 10 லட்சத்தில் கணினியிலிருந்து அச்சுத் தகடு தயாரிக்கும் இயந் திரம், ரூ.40 லட்சத்தில் தானியங்கி சேகரிப்பு இயந்திரம், ரூ.10 லட்சத்தில் திரை அச்சு இயந்திரம் என மொத்தம் ரூ.8 கோடியே 10 லட்சத்தில் இயந்திரங்கள் வாங்கி நிறுவப்பட்டுள்ளன. இதேபோன்று ரூ. 67 லட்சத்து 50 ஆயிரத்தில் புதிய காகிதக் கிடங்கு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சென்னை, அரசு மைய அச்சகத்தில் எதிர்பாராது ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடங்களும், அச்சு இயந்திரங்களும் சேதம டைந்ததால், சீரமைப்பு நடவடிக் கையாக இயந்திரக் கொள்முதல் மற்றும் தொடர்புடைய பிற பணிகளுக்காக ரூ.19 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம், கட்டிடப் பணிகளுக்காக ரூ.3 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 22 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
புதிய கட்டிடம்
சுமார் 5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த அச்சகத் தின் 84,000 சதுர அடிகள் கொண்ட பழமை வாய்ந்த கட்டிட மானது, இந்த தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து சேதம டைந்துவிட்டதாலும், பணியாளர் கள் சிரமமின்றி பாதுகாப்புடன் பணிபுரிய நிரந்தரமானக் கட்டிடம் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டும் ரூ. 21 கோடியே 59 லட்சத்தில் புதிய நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்படும்.
பைண்டிங் பிரிவு
சென்னை, அரசு மைய அச்சகத்தில் மேற்கொள்ளப் படும் அனைத்து அச்சுப் பணி களும் ஒரே நேரத்தில், குறைந்த காலத்தில், விரைந்து மேற்கொள் ளப்பட வேண்டும் என்றால், அங்குள்ள அச்சகப்புத்தகம் கட்டும் பிரிவு அதாவது “பைண்டிங் பிரிவு” மேம்படுத்தப் படுவது அவசியம். எனவே, அரசு மைய அச்சகத்தின் அச்சகப் புத்தகம் கட்டும் பிரிவிற்காக ரூ.2 கோடியே 50 லட்சத்தில் தானியங்கி புத்தகம் தைக்கும் இயந்திரம் வாங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை கூடுதல் உற்பத்தித் திறனுடன் அதிக நேர்த்தியாகவும், விரைவா கவும் புத்தகங்கள் கட்டும் பணியினை மேற்கொள்ள வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.