தமிழகம்

சென்னை | கழிவுநீர் அகற்றும் சேவை பாதிக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட காந்தி நகர் முதலாவது பிரதான சாலையில் புதிதாக பதிக்கப்பட்ட 1,000 மிமீ விட்டமுள்ள கழிவுநீர் உந்துகுழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (மே 12) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அடையாறு கழிவுநீர் உந்துநிலையம் செயல்படாது.

எனவே, தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர்நிரம்பி வெளியேறும் நிலைஎற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற சென்னை குடிநீர் வாரியத்தின் தேனாம்பேட்டை மண்டல பொறியாளர் (81449 30909), அடையாறு மண்டல பொறியாளர் (8144930913) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT