தமிழகம்

முதுநிலை படிப்பு நீக்கப்பட்டதை கண்டித்து: சென்னை பல்கலை.யில் மாணவர் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் கீழ் முதுநிலை பிரிவில் அனைத்துலக தொடர்புகள் (M.A. International Relations) என்ற படிப்பு கடந்த10 ஆண்டுகளுக்கு மேல் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்த படிப்பை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்த சென்னை பல்கலை. நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT