தமிழகம்

துணை தலைவர், 14 உறுப்பினர்களுடன் தூய்மைப் பணியாளர் நலவாரியம் திருத்தியமைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் ஜி.லட்சுமி பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 8.7.2021 அன்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து, வாரியத்தை திருத்தியமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ஒரு துணைத் தலைவர், 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல்சாரா உறுப்பினர்களைக் கொண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை திருத்தியமைத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைகடந்த 3-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

SCROLL FOR NEXT