தமிழகம்

அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் ஏன்? - அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: 2,000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப் பணி நடந்து வருகிறது. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதும், நவக்கிரக தலங்களை இணைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர், முறையாக விடுப்பு எடுக்காமல் சென்று விடுகின்றனர். முறையான தகவல் இல்லாத சூழலில், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே, இதை சீரமைக்க அவுட்சோர்சிங் மூலம் பணி நியமனம் செய்யும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT