சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலந்தூர்-பாலகிருஷ்ணாபுரம் மயானபூமி 2 மாதங்களுக்கு இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியில் உள்ள எரிவாயு தகன மேடையை, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, நாளை (மே.10) முதல், வரும் ஜூலை 10-ம்தேதி வரை மேம்பாட்டு பணிகள்நடைபெற உள்ளதால் பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியானது 2மாதங்களுக்கு இயங்காது. இந்நாட்களில் அருகே உள்ள கண்ணன் காலனி மயான பூமியைபொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேபோல மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட சாஸ்திரி நகர்மயான பூமியில் திரவ பெட்ரோலிய தகன மேடை மற்றும் புகைபோக்கியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி நாளைமுதல் மே 25-ம்தேதி வரை 15 நாட்களுக்கு சாஸ்திரி நகர் மயானபூமி இயங்காது. இந்த நாட்களில், பொதுமக்கள் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் மயான பூமி மற்றும் தெலுங்குகாலனி மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.