புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியின்போது குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள். 
தமிழகம்

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 16 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு

செய்திப்பிரிவு

கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2007-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும், முன்னாள் மாணவர்கள்சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் பள்ளி கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் வித்யா பேசியதாவது:

இன்றைய மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கல்விஉள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு நல்லொழுக்கங்களை விடுத்து தவறான பாதைகளில் செல்லும் நிலை உள்ளது.

அதனால், முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்று தங்களுடைய காலக்கட்டங்களில் அனுபவித்த கஷ்டங்களையும் நல்லொழுக்கங்களையும் மாணவர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT