தமிழகம்

நிலக்கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி, நிலக்கோட்டை தொகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, எரியோடு, பழநி பகுதிகளில் மொத்தம் 42 அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழத்தில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் அனைத்தையும், பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி, திண்டுக்கல் அடுத்துள்ள நிலக்கோட்டை தொகுதி கொக்கு பிள்ளைப்பட்டி,

ராமராஜபுரம், மேட்டுப்பட்டி, சிலுக்குவார்பட்டி, கெங்கு வார்பட்டி, தருமத்துப்பட்டி, விரு வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பிரமலைக் கள்ளர்கள் தங்கள் வீடுகள் மற்றும் மின் கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT