சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 31 பணிமனைகள் உள்ளன. இதன் வாயிலாக 629 வழித்தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் புறநகருக்கு இயக்கப்பட்டாலும் போதிய சேவை இல்லைஎன புகார்கள் வருகின்றன.
மேலும் பெரும்பாலான பணிமனைகள் ஊருக்குள் இருப்பதால் இரவு நேரத்தில் சீக்கிரமே திரும்ப வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
அதே நேரம், சென்னையின் புறநகரில் குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே போக்குவரத்துசேவை இன்றியமையாததாகிறது.
இதை கருத்தில் கொண்டு, தையூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், பெரம்பூரில் மேலும் ஒரு பணிமனை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் புதியபேருந்து நிலையம் என 7 இடங்களில் அமைக்கப்படும் பணிமனைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.