கோப்புப் படம் 

 
தமிழகம்

பிளஸ் 2 தேர்வு முடிவு: புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் 98.57% தேர்ச்சி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 12-ம் வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் 98.57 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றுக்கின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த 12-ம் வகுப்பு தேர்வு நடந்தது. புதுச்சேரி காரைக்காலில் 7497 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 7390 பேர் இன்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதில் 3811 மாணவர்களும், 3579 மாணவிகளும் தேர்ச்சி அடைந்தனர். இதில் ஆண்கள் 97.97 சதவீதமும், பெண்கள் 99.22% என மொத்தம் 98.57% தேர்ச்சி அடைந்தனர். இதில் புதுச்சேரியில் 98.65 சதவீதமும், காரைக்காலில் 97.67% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலி்ல மொத்தம் 100 தனியார் பள்ளிகளில் 63 பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவற்றில் புதுச்சேரியில் 54-ம், காரைக்காலில் 9-ம் அடங்கும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் 500 பேர் பெற்றுள்ளனர். அதில் இயற்பியலில் 3, வேதியியலில் 6, உயிரியலில் 9, கணிப்பொறி அறிவியலில் 190, கணிதம் 5, தாவரவியல் 1, விலங்கியல் 1, பொருளியல் 12, வணிகவியல் 27, கணக்குப் பதிவியல் 36, வணிக கணிதம் 13, கணிப்பொறி பயன்பாடு 69, வரலாறு 3, தமிழ் 2, பிரெஞ்சு 123 பேர் நூறு சதம் தேர்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT